பீஹார்- லாரி‌ மீது பேருந்து மோதி ஒருவர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Jan, 2019 12:47 pm
bihar-collision-between-a-truck-and-a-bus-one-dead

பீஹார் மாநிலத்தில் இன்று காலை பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீஹார் மாநிலம் சிதாமராஹி என்ற இடம் அருகே ரன்னி சைதாப்பூர் சுங்கச்சாவடி அருகே இன்று காலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து அப்பளம் ‌போல் நொறுங்கியது. பேருந்தில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.

மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனயைில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close