பாஜக தேர்தல் அறிக்கை: ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 12:57 pm
bjp-s-election-manifesto-committee-meet-today-chaired-by-rajnath-singh

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம், மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவது, பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் தொகுதி பங்கீடு, கட்சியின் தேசிய மாநாடு என, மக்களவைத் தேர்தல் பணிகளை பாஜக ஜரூராக மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், அடுத்த முக்கிய கட்டமாக, மக்களின் வாக்குகளை கவர்ந்திழுக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இதில், இக்குழுவில் இடம்பெற்றுள்ள 20 பேருடன் ராஜ்நாத் சிங் விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close