குருகோவிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள்- நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்!

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Jan, 2019 01:23 pm
pm-to-released-new-coin-on-guru-gobind-singh

குருகோவிந்த் சிங்கின் 350வது பிறந்த நாளை முன்னிட்டு 350 ரூபாய் மதிப்புடைய புதிய நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ளார்.

சீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோவிந்த் சிங்.பீகார் மாநிலம் பாட்னாவில் 1666ஆம் ஆண்டு பிறந்தவர். பத்தாவது சீக்கிய குருவாக குருகோவிந்த் சிங் இருந்தார். இவர் ஒரு ஆன்மீகவாதி, போர்வீரர், கவிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார். 

 குருகோவிந்த் சிங்கின் 350வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி,  அவரை சிறப்பிக்கும் வகையில் புதிய ‌நாணயத்தை இன்று  வெளியிட்டார்.

இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் மன்கீபாத் நிகழ்ச்சியில் உரையாற்றி பிரதமர் மோடி, 10வது சீக்கிய குருவான குருகோவிந்த் சிங் மிகப்பெரிய ஆன்மீகவாதி, போராளி மற்றும் தியாக குணம் உடையவராக திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டினார்.

350 ரூபாய் மதிப்புடைய இந்த நாணயத்தில், அசோக சக்கரம், சத்யமேவ ஜெயதே வாசகத்துடன், பாட்னாவில் குருகோவிந்த் சிங்கின் புகழை பரப்பும் தக்த் ஸ்ரீஹர்மிந்தர் பாட்னா சாகிப் குருத்துவாராவின் தோற்றம் இடம்பெற்றுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான அளவிலேயே இந்த நாணயங்கள்  வெளியிடப்பட்டுள்ளது எனக்கூறப்படுகிறது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close