ராமஜன்ம பூமி வழக்கு விசாரணை- நேரடியாக ஒளிபரப்ப கோரிக்க‌ை‌

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Jan, 2019 01:11 pm
supreme-court-to-ensure-live-streaming-of-ayodhya-issue

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமஜன்மபூமி உரிமம் தொடர்பான வழக்கை நேரடியாக ஒளிப்பரப்ப வேண்டும் என்று பாஜகவின் தலைவரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அயாேத்தி ராமஜன்ம பூமி மீதான உரிம விவகாரம் தொடர்பான வழக்கு இம்மாதம் 29ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை சாதாரண மனிதன் கூட வெளிப்படயைாக தெரிந்து கொள்ளும் வகையில், அதை நேரடியாக ஒளிப்பரப்ப வேண்டும் என்று பாஜகவின் தலைவரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதே போல் பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 22ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணை குறித்த வீடியோ பதிவுகள் மற்றும் இம்மாதம் 22ம் தேதி நடைபெறவுள்ள வழக்கின் விசாரணையை நேரடியாக ஒளிப்பர வேண்டும் என்று அய்யப்ப பக்தர்கள் கூட்டமைப்பின் வழக்கறிஞரான மேத்யூஸ் நெடும்புரா உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close