ஃபேஸ்புக்கில் ரகசிய தகவல் பரிமாற்றம்: ராணுவ வீரர் கைது

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 02:02 pm
indian-army-jawan-arrested-by-rajasthan-police-who-has-sharing-secrets-to-isi-through-fackbook

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பைச் சேர்ந்தவருடன், ஃபேஸ்புக்கில் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இந்திய ராணுவ வீரரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்திய -பாகிஸ்தான் எல்லைப் பகுதியான, ராஜஸ்தானின் ஜெய்ஷால்மர் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப் பிரிவைச் சேர்ந்தவர் சோம்பீர்.

ஹரியாணாவை பூர்வீகமாக கொண்ட இந்த  ராணுவ வீரர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை சேர்ந்த உளவாளியுடன்  இந்திய ராணுவம் குறித்தும்,  எல்லையில் பீரங்கிப் படையின்  கண்காணிப்புப் பணிகள் பற்றியும் ரகசிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டு வந்துள்ளார்.

"அனிக்கா சோப்ரா" என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் அறிமுகமான ஐஎஸ்ஐ உளவாளியுடன்,  சோம்பீர் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டு வந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, ராஜஸ்தான் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

"இந்த கைது நடவடிக்கையில் ராஜஸ்தான் போலீஸாருக்கு சட்டரீதியான அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப்படும்" என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று,  ராணுவ ரகசியங்களை பகிர்ந்ததற்காக, இந்திய விமானப் படை அதிகாரி ஒருவரும், பிரம்மோஸ் ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய ஊழியரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close