உ.பி: 80 இடங்களிலும் போட்டியிடுகிறது காங்கிரஸ்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 03:36 pm
up-congress-to-contest-in-80-seats

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில், அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி கூட்டணி அமைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 80 இடங்களிலும் தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளது. 

2019 நாடாளுமன்ற தேர்தலில், உ.பி மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து, பாரதிய ஜனதாவை வீழ்த்த திட்டமிட்டு வந்தன. காங்கிரஸ் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று சமாஜ்வாடியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பஹுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, கூட்டணி அமைப்பதாக தெரிவித்தனர். இரண்டு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுவதாக முடிவெடுத்தன. இதனால், இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடமில்லாமல் போனது. இந்நிலையில், உ.பி-யில் 80 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளது. 

இன்று நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், "2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உத்தர பிரதேசத்தில் அதிக இடங்களை வென்றது. அதேபோல இந்தமுறை தனித்து போட்டியிட்டு, இரண்டு மடங்கு இடங்களை வெல்லுவோம்" என்றார்.

"கூட்டணியை நாங்கள் உடைக்கவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாரதிய ஜனதாவை வீழ்த்த எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தோம். அவர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதனால், நாங்கள் தனியாகவே பாரதிய ஜனதாவுக்கு வீழ்த்த போட்டியிடுவோம்" என்றார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close