அறுவை சிகிச‌்சையின் தந்தை சுஷ்ருதாவின் மருத்துவ ஆவணம் உண்மை: கொலம்பியா பல்கலைக்கழகம்

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Jan, 2019 03:48 pm
columbia-university-recognizes-sushruta-s-contribution

அறுவை சிகிச்சையின் தந்தை சுஷ்ருதாவின் மருத்துவ ஆவணத்தை உண்மை என்று கொலம்பியா மருத்துவ பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்தியாவில் வாழந்த சுஷ்ருதா என்பவர் அறுவை சிகிச்சையின் தந்தை என்று இந்துக்களால் போற்றபடுபவர்.

இதை உறுதி செய்யும் விதமாக கொலம்பியா மருத்துவ பல்கலைக்கழகம் 2 ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன் அறுவை சிகிச்சை முறை இருந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

6ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுஷ்ருதா மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய உலகின் ஆரம்ப கால படைப்புகளை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆயிரத்து நூறு நோய்கள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான மூலிகைகளை ஆவணப்படுத்தியுள்ளார்.

அறுவை சிகிச்சை மூலம் 3 வகை தோல் ஒட்டுணிகள் மற்றும் மூக்கின் புனரமைப்பு செய்யப்படும் முறை குறித்து அவர் அதில் பதிவு செய்துள்ளதாகவும் கொலம்பியா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close