முத்தலாக் தடை - அவசரச் சட்டம் மீண்டும் அமல்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 03:46 pm
central-govt-once-again-implemented-the-triple-talaq-ordinance

முஸ்லிம் ஆண்கள் மூன்று முறை உடனுக்குடன் தலாக் சொல்லி அவர்களது மனைவியை விவகாரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் வகையிலான அவசரச் சட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

முன்னதாக, இதேபோன்றதொரு அவசரச் சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் அமல்படுத்தியது. அதற்கு மாற்றான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில், அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத சூழலில், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் இல்லை என்பதால் முத்தலாக் மசோதா இன்னும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, முந்தைய அவசரச் சட்டம் அண்மையில் காலாவதியானது. இதையடுத்து, முத்தலாக் தடை அவசரச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, அவசரச்சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. முத்தலாக் தடை சட்டத்தை யாரேனும் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்று எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர் ஜாமீன் பெறுவதற்கான பிரிவை மத்திய அரசு சேர்த்துள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close