கும்பமேளா- பிரயாக்ராஜ் நகரில் புதுப்பொலிவுடன் ஓவியங்கள்

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Jan, 2019 04:23 pm
kumbamela-new-art-drawings-in-prayagraj


உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் நாளை மறுதினம் கும்பமேளா திருவிழா தொடங்கவுள்ளது. இதையடுத்து நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா நாளை ‌மறுநாள் தொடங்கவுள்ளது. இதற்காகப் போக்குவரத்து, தங்குமிடம், குடிநீர், கழிப்பிடம், நீராடும் துறைகள் என அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

விழாவை முன்னிட்டுப் பிரயாக் ராஜ் நகரை அழகுபடுத்துவதற்காகக் கட்டடச் சுவர்கள், பாலங்கள் ஆகியவற்றில் தேசியத் தலைவர்களின் படங்கள், பண்பாட்டை விளக்கும் படங்கள் வரையப்பட்டுள்ளன.

புதிய வண்ணந்தீட்டிப் படங்கள் வரையப்பட்டுள்ளதால் கட்டடங்களும் புதுப்பொலிவு பெற்று எழில்மிகு தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. 
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close