ரயிலின் வருகையை அறிந்து கொள்ள புதிய வாட்ஸ்அப் நம்பர்

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Jan, 2019 06:58 pm
new-whatsap-number-to-know-about-the-train-status

ரயிலின் வருகையை துல்லியமாக தெரிந்து கொள்ள இந்திய ரயில்வே புதிய வாட்ஸ்-அப் நம்பரை அறிவித்துள்ளது.

ரயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியன் ரயில்வே அவ்வப்போது புதுப்புது முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்-அப் மூலம் ரயிலின் வருகை குறித்து பயணிகள் அறிந்துக்கொள்ள 7349389104 என்ற மொபைல் எண்ணை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த எண்ணை போனில் சேமித்துக் கொள்ள வேண்டும். 

பின் வாட்ஸ்-அப்பில் சென்று சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு பயணிகள் தாங்கள் பயணம் செய்ய இருக்கும் ரயிலின் எண்ணை அனுப்ப வேண்டும்.

அடுத்த சில நொடிகளில் பயணிகளின் வாட்ஸ் அப்பில் ரயில் எண், எப்போது ரயில் புறப்பட்டது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டி உள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் குறுச்செய்திகளாக பெற முடியும். இதனால் பயணிகள் உடனடியாக தங்கள் செல்ல வேண்டிய ரயிலின் வருகையை துல்லியமாக அறிய முடியும்.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close