மகர ஜோதி: சமபரிமலையில் குவியும் பக்தர்கள்

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 11:19 am
makara-jyothi-in-sabarimala

மகர ஜோதி: சமபரிமலையில் குவியும் பக்தர்கள்

மகர சங்கராந்தியை முன்னிட்டு, கேரள மாநிலம், சபரிமலையில், மகர ஜோதி தரிசனத்திற்காக, ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

கேரள பஞ்சாகப்படி, சூரியன் மகர ராசிக்குள் நுழையும் நாள், மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், கேரள மாநிலம் பொன்னம்பல மேட்டில், சுவாமி அய்யப்பன் ஜோதி ரூபமாக காட்சி தருவதாக ஐதீகம். 

இந்த தரிசத்தை காண, ஆண்டு தாேறும், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், மாலை அணிந்து, விரதம் இருந்து, சமரிமலைக்கு வருகின்றனர்.

இன்று மாலை, பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரணங்கள் எடுத்து வரப்பட்டு, சபரிமலை அய்யப்பனுக்கு அணிக்கப்படும். அங்கு நடக்கும் சிறப்பு பூஜையை தொடர்ந்து, கருடன் எனப்படும் பட்சி வானத்தில் வட்டமிடும், அப்போது, வானத்தில் விசேஷமான நட்சத்திரம் தென்படும்.

அதன் பின், சற்று நேரத்தில், பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி தென்படும். மிகக்குறுகிய கால அவகாசம் மட்டுமே தென்படும் இந்த ஜோதியை காண, லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள், சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். 

சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின், அங்கு அய்யப்ப பக்தர்கள் - நாத்திகத்தை பின்பற்றும் மார்க்சிஸ்ட் ஆட்சியாளர்களிடையே, தொடர்ந்து மாேதல் போக்கு காணப்படுகிறது. 

பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, இளம் வயது பெண்கள் சிலர் சுவாமி தரிசனம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், மகர ஜோதியை முன்னிட்டு, கட்டுக்கடங்கா பக்தர் கூட்டம் காணப்படுவதால், சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எவ்வித அசம்பாவதிங்களும் நடக்காமல் இருக்க, மாநில அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close