கும்பமேளாவில் தீ விபத்து: தற்காலி குடில்கள் நாசம் 

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 01:29 pm
fire-at-kumbhamela

 

உத்தர பிரேதச மாநிலம் அலகாபாத்தில், கும்பமேளா நாளை துவங்கவுள்ள நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி வருவதால், பல குடில்கள் தீக்கிரையாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தில், உலக பிரசித்தி பெற்ற கும்பமேளா நாளை துவங்கவுள்ளது. இதை முன்னிட்டு, அலகாபாத் நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் தங்க வசதியாக, ஏராளமான தற்காலி குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், திகம்பர் காட் அருகே அமைக்கப்பட்டுள்ள, திகம்பர் அகாடா குடிலில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி வருவதால், ஏராளமான குடில்கள் தீக்கிரையாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்காலிக குடிலில் பயன்படுத்தப்பட்ட சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததே, தீ விபத்திற்கு காரணம் என, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close