மலைகளின் மீது பெண்களுக்கு என்னதான் காதலோ?

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 03:35 pm
first-women-reaches-to-agashthiyarkoodam

 

கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள, அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்களை, அந்த கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு அனுமதிக்காமல் இருந்தது. 

அய்யப்பன் நித்ய பிரம்மச்சாரியாக இருப்பதால், கோவிலின் புனிதம் கருதியும், வனப் பகுதியில் பெண்கள் பாதுகாப்பு கருதியும், இந்த தடை பல ஆண்டுகளாக அமலில் இருந்து வந்தது.

இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில், நாத்திகவாதிகளும், பெண்ணியவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலரும், சபரிமலையில் பெண்களை அனுமதித்தே தீர வேண்டும் என கூறி வந்தனர்.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இதற்கு ஆதரவாக, மாநிலத்தை ஆளும், மார்க்சிஸ்ட் அரசு கருத்து தெரிவித்ததால், சமபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதற்கு, அய்யப்ப பக்தர்களும், ஹிந்துத்வா அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், எப்படியோ சூழ்ச்சி செய்து, பக்தர் என்ற போவையில் நாத்திகவாத பெண்கள் சிலர், சபரிமலைக்கு சென்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், கேரள மாநிலம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், காெல்லம் மாவட்டத்தை ஒட்டியும், தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டியும் அமைந்துள்ளது, அகஸ்தியர் மலை. 

ஹிந்துக்கள், சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றும், அகஸ்தியர், இந்த மலை உச்சியில் ஜீவசமாதியாக உள்ளதாகவும், அவர், இன்றும் ஆத்ம ரூபமாக அந்த மலை உச்சியில் வசிப்பதாகவும், அங்குள்ள பழங்குடியினரால் நம்பப்படுகிறது.

அகஸ்தியர்கூடம் என கூறப்படும் அந்த மலை உச்சிக்கு செல்ல பெண்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இந்நிலையில், இந்த மலை உச்சிக்கு செல்ல பழங்குடியினர் அனுமதி மறுப்பதை எதிர்த்து, அந்த மாநில உயர்நீதிமன்றத்தில், பெண்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், பெண்கள் அமைப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதை அடுத்து, திருவனந்தபுரத்தை சேர்ந்த, ராணுவ செய்திதொடர்பாளரும், இளம் பெண்ணுமான, தன்யா, அகஸ்தியர் கூடத்தை சென்றடைந்துள்ளார்.

இதன் மூலம், இந்த உச்சியை அடைந்த முதல் பெண் என்ற பெயரும் இவருக்கு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் வரை நடக்கும் மலையேற்றத்தில் பங்கேற்க, இதுவரை, 4,700 பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். அவர்களில், 50க்கும் மேற்பட்ட பெண்களும், அகஸ்தியர்கூடம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தன்யா, மலை உச்சிக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தினர், நுாதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம், மலையின் புனிதம் கெட்டுவிட்டதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close