வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு?

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 03:54 pm
income-tax-limit-extend-to-rs-5-lakh

தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை, மத்திய அரசு ரூ.5 லட்சமாக உயர்த்தயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்றத்துக்கு விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால்,  வழக்கம்போல் இந்த முறை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படமாட்டாது. அதற்கு பதிலாக, வரும் பிப்ரவரி 1 -ஆம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

அதில் முக்கிய அம்சமாக,  தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை தற்போதுள்ள 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீதம், ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டு வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close