‛மஹாமண்டலேஸ்வர்’ ஆனார் மத்திய அமைச்சர் ஜோதி 

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 04:39 pm
minister-jyothi-becomes-mahamandalwshwar


உத்தர பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவில், மத்திய அமைச்சர், நிரஞ்ஜன் ஜோதிக்கு, மஹாமண்டலேஸ்வர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஒருவருக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது இதுவே முதல் முறை.

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் எனப்படும் பிரயாக்ராஜ் மாவட்டத்தில், நாளை கும்பமேளா துவங்குகிறது. இதில், நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் உலகின் பல நாடுகளை சேர்ந்தோர் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளனர். 

இதற்காக, மத்திய, மாநில அரசுகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சர் நிரஞ்ஜன் ஜோதி, நிரஞ்ஜனி அகாடாவின் சார்பில், மஹாமண்டலேஸ்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, 13 அகாடாக்களை சேர்ந்த, மஹாமண்டலேஸ்வரர்கள் பட்டாபிஷேகம் செய்து வைத்தனர். 

இதன் மூலம், மத்திய அமைச்சர் ஒருவர் முதல் முறையாக மஹாமண்டலேஸ்வர் ஆக்கப்பட்டுள்ள பெருமை, நிரஞ்ஜன் ஜோதிக்கு கிடைத்துள்ளது. 

ஹிந்து மதத்திற்காகவும், அந்த மத்தை சேர்ந்த மக்கள் நலனுக்காவும் அரும்பணியாற்றிய சாதுக்களுக்கு, மஹாமண்டலேஸ்வர் பதவி வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நிரஞ்ஜன் ஜோதிக்கு அந்த கவுரவம் கிடைத்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய சாதுக்கள், ‛நிரஞ்ஜன் ஜோதி முதலில் ஒரு பெண் துறவி, அதன் பிறகே அவர் மத்திய அமைச்சர். மஹாமண்டலேஸ்வர் பட்டத்திற்கு அவர் மிகவும் பொருத்தமானவர்’ என்றனர். 
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close