பொறியியல் படிப்பு நுழைவுத் தேர்வு: விடைக்குறிப்பு வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 04:53 pm
jee-main-exam-answer-key-released

பொறியியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான, தேசிய அளவில் அண்மையில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மை தேர்வுக்குரிய விடைக்குறிப்பு (Answer Key) வெளியிடப்பட்டுள்ளது.

ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் (ஜெஇஇ) வெற்றி பெறுவது அவசியம்.

இந்த ஆண்டுக்கான ஜெஇஇ முதன்மை தேர்வை, தேசியத் தேர்வு முகமை (என்டிஏ),  ஜனவரி 9 -ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை நடத்தியது. தற்போது இத்தேர்வுக்கான விடைக்குறிப்பு (Answer Key) மற்றும் வினாத்தாள், jeemain.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், போட்டியாளர்கள் உடனே அதனை ஆன்-லைனில் தெரிவிக்க வேண்டும்.

ஜெஇஇ முதன்மைத் தேர்வுக்கான (வினாத்தாள் 1) முடிவுகள் இம்மாதம் 31 -ஆம் தேதியும் , தரவரிசைப் பட்டியல் ஏப்ரல் மாத இறுதியிலும் வெளியிடப்படவுள்ளன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close