பொங்கல் பண்டிகை: பட்டம்விட்ட அமித் ஷா!

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 05:19 pm
bjp-president-amit-shah-flies-a-kite-in-nava-vadaj-ahmedabad-on-makarsankranti

பொங்கல் பண்டிகையையொட்டி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, வானில் பட்டத்தை பறக்கவிட்ட லாவகத்தை கண்டு அக்கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

வடமாநிலங்களில் பொங்கல் பண்டிகை மகரசங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையையொட்டி, குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரின் நவ வதாஷ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் நின்றபடி, பாஜக தலைவர் அமித் ஷா இன்று மாலை பட்டம்விட்டு மகிழ்ந்தார்.

காற்றின் போக்குக்கு தக்கவாறு பட்டத்தின் கயிறை மிக லாவகமாக அவர் கையாண்டதைக் கண்டு, அவரை சூழ்ந்திருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close