பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி: பக்தர்கள் பரவசம்!

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 06:39 pm
makara-jothi-at-sabarimala

 

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகர ஜோதியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முன்னதாக, பந்தளம் அரண்மனையிலிருந்து, ஆபரணங்கள் எடுத்து வரப்பட்டு, அவை அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டன. பின் விசேஷ பூஜை நடந்தது. 

வானத்தில், விசேஷ நட்சத்திரம் தாேன்றியதும், அதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். சபரிமலை, பம்பை உள்ளிட்ட இடங்களில் கூடியிருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர்.

அதை தொடர்ந்து, பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி தெரிந்தது. மூன்று முறை விட்டு விட்டு தெரிந்த ஜோதியை பார்த்து, பக்தர்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர். 

பின் அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த தரிசனத்தை காண, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சபரிமலையில் குவிந்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close