காப்பகங்கள் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 12:14 am
cbi-files-fir-against-shelters

பீஹாரில், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக, இரு தனியார் காப்பகங்கள் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கயா மாவட்டத்தில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும், ஆதரவற்ற சிறுவர்களுக்கான காப்பகம் மற்றும் பகல்பூரில் செயல்படும் தனியார் காப்பகத்தில் சட்ட விரோத செயல்கள் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, அங்கு சோதனையில் ஈடுபட்ட சி.பி.ஐ., அதிகாரிகள், அந்த காப்பகங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், முதல் தவகல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close