மோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்!

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 11:37 am
bill-gates-congrats-to-pm-modi

தேசிய அளவிலான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதற்காக, பிரதமர் நரேந்திர மோடியை, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு நேற்றுடன் 100 நாள்கள் நிறைவடைந்துள்ளது. இதற்காக, பிரதமர் மோடியை பில் கேட்ஸ் தமது டுவிட்டர்  பதிவில் வெகுவாக பாராட்டியுள்ளார்.

மேலும் அதில், "இந்த சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருவதற்காக, இந்திய அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும், இந்தத் திட்டத்தால் இதுவரை பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது" என்றும்  தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், " மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம், முதல் 100 நாட்களில் மட்டும், நாடு முழுவதும் 68.5 லட்சம் பயனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேன்மேலும் உயரும்" என பெருமைப்பட தெரிவித்திருந்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close