இடமாற்றத்தை ஏற்க முடியாது: பிஷப் பிரான்கோ விவகாரத்தில் கன்னியாஸ்திரி பேட்டி

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 11:29 am
we-won-t-go-but-will-be-here-with-our-survivor-sister-until-our-case-ends-sister-anupama

நீதிமன்றத்தை நம்பி இருப்பதாக பிஷப் பிரான்கோ விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட 4 கன்னியாஸ்திரிகளுள் ஒருவரான அனுபமா தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்த்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள கிறிஸ்த்துவ  திருச்சபையில் பிஷப்பாக உள்ள, பிரான்கோ முலக்கல், தன்னை வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்தார். 

பல கட்ட விசாரணைக்குப் பின், பிஷப் பிரான்கோவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பிரான்கோவிடமிருந்து பிஷப்புக்கான பொறுப்புகள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டன. இந்நிலையில், பிரான்கோவுக்கு எதிராக புகாரளித்த, கன்னியாஸ்திரியுடன் தங்கியுள்ள, நான்கு கன்னியாஸ்திரிகளை, பணியிட மாற்றம் செய்து, திருச்சபை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. 

எனினும், இந்த உத்தரவை ஏற்க, நால்வரும் மறுத்துவிட்டனர். அவர்கள், தங்கள் தரப்பு நியாயத்தை கூறியும், தங்கள் பணியிடமாற்றத்திற்கான காரணம் கேட்டும் திருச்சபை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நால்வரும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக இருப்பதால், பிரான்கோவுக்கு எதிராக வலுவான சாட்சியாக அமையக்கூடும் என்பதால், அவர்களை வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக, திருச்சபை நிர்வாகத்தின் மீது சக கன்னியாஸ்திரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளில் ஒருவரான அனுபமா சமீபத்தில் அளித்த பேட்டியில், "நாங்கள் இந்த வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியுடன் தான் இருப்போம். பிஷப் பிரான்கோவிடம் நிறைய பணமும்,அரசியல் பலமும் இருப்பது எங்களுக்கு தெரியும். அதனால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். ஆனால் நீதிமன்றம் எங்களுக்கு உரிய நீதியை வழங்கும் என்று நம்புகிறோம். நடந்து வரும் விசாரணை திருப்தி அளிப்பதாக தான் இருக்கிறது" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close