2019 நாடாளுமன்ற தேர்தலில் NRI-கள் வாக்களிக்கலாம்!

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 06:47 pm
nri-s-can-vote-in-2019-parliamentary-elections

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சுமார் 3 கோடி பேர், இந்திய தேர்தல்களில் வாக்களிக்க இயலாத நிலை இருந்து வந்தது. அதனை மாற்றும் விதமாக, என்.ஆர்.ஐ-கள் தேர்தலில் வாக்களிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, என்.ஆர்.ஐ-கள் தேர்தலில் ஓட்டளிக்க தங்களது பெயரை பதிவு செய்ய, தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. 

தேர்தல் கமிஷனின் https://eci.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, அதில், 'ENROLL AS NRI VOTER' என்ற பதிவை தேர்வு செய்ய வேண்டும். அதில் பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட தங்களது விவரங்களையும், எதற்காக வெளிநாட்டில் உள்ளார்கள் என்ற விவரங்களையும் பதிவு சேயாய் வேண்டும். தேர்தலில் வாக்களிக்க இந்திய பாஸ்போர்ட் அவசியமானது. வெளிநாட்டு குடியுரிமை வைத்திருப்பவர்கள்  வாக்களிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close