10 நாட்களில் இரண்டு முறை தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 09:02 pm
modi-rally-in-tamilnadu-twice-in-10-days

2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி மாதம் 10 மற்றும் 19ம் தேதிகளில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், பாரதிய ஜனதா கட்சி தீவிர தேர்தல் பரப்புரைக்கு தயாராகி வருகிறது. நரேந்திர மோடியின் பிரச்சார திட்டங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, பிப்ரவரி மாதம் 10ம் தேதியும், 19ம் தேதியும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர்கள் நிதின் கட்கரி நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர் அமித் ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருவதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன் இல்லாத அளவு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி இந்த முறை தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close