மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 08:42 am
aap-rules-out-alliance-with-congress-for-elections-2019

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. 

2019ம் ஆண்டு மே மாதம் மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி, கட்சிகள் அனைத்தும் தீவிரப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக, காங்கிரஸ் மற்றும் சில மாநில கட்சிகள் இணைந்து கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. 

இந்த சூழ்நிலையில், ஆம் ஆத்மி கட்சி வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும், பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லியில் தனித்துப் போட்டியிடப் போவாதாகவும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸூடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தனியாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது காங்கிரஸ் தரப்பினரிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close