உத்தரப்பிரதேசம்- உயிரிழந்த ஆய்வாளாரின் குடும்பத்திற்கு நிதியுதவி

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Jan, 2019 12:56 pm
up-police-donates-rs-70-lakh-to-family-of-inspector-killed-in-bulandshahr

உத்தரப்பிரதேசத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி சுபோத் குமாரின் குடும்பத்திற்கு உத்தரப்பிரதேச காவல்துறை சார்பாக. 70 லட்சம்  ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

புலந்த்சாரில் பசு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது. அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சென்றார். அவரைத் தாக்கிய கும்பல், அவரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவரை சுட்டுக் கொன்றது. 

இது தொடர்பாக முக்கிய குற்றவாளியான பஜ்ரங் தளத்தை சேர்ந்த யோகேஷ் ராஜ் என்பவர் பிடிபட்டுள்ளார். 
உயிரிழந்த சுபோத் குமாரின் குடும்பத்திற்கு மாநில அரசு தரப்பில் ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

இதற்கிடையே அவரது குடும்பத்திற்காக உத்தரப்பிரதேச காவல் துறை தரப்பில் நிதி திரட்டப்பட்டது. இதில் சுமார்  70 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளது. அந்த தொகையை போலீசார் சுபோத் ராயின் குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close