சுரங்க பணியாளர்கள் உடலை மீட்கும் பணிகள் தற்காலிக நிறுத்தம்!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 05:37 am
trapped-miners-body-retrieval-operation-stopped

மேகாலயாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 370 அடி ஆழ நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 பணியாளர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உடல்கள் சேதமடைவதால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 13ம் தேதி, மேகாலயாவில் ஜெயந்தியா மலைப் பகுதியில், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கங்களில் ஒன்றில் 15 சுரங்கப் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். எலி பொந்து சுரங்கம் என அழைக்கப்படும் சிறிய குறுகலான இந்த சுரங்கங்களில், கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டதால் உள்ளே சென்ற சுரங்கப் பணியாளர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

சிக்கியவர்களை மீட்க ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு துறை அதிகாரிகள் போராடி வந்த நிலையில், இறந்த பணியாளர்களின் உடல்களை மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர். இறந்தவர்களின் உடல்களை தங்களிடம் தர வேண்டும் என சிக்கிய பணியாளர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்த நிலையில், தண்ணீருக்கு அடியில் செயல்படும் ரிமோட் கண்ட்ரோல் வாகனம் மூலம் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 

இந்த நிலையில், ஒரு பெயர் தெரியாத பணியாளரின் உடலை எடுக்க முயற்சி செய்தபோது, அவரது உடல் கடுமையாக சேதம் அடைந்ததாக டைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போதைக்கு உடல்களை மீட்கும் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close