காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்து இந்திய ராணும் தாக்குதல்!

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Jan, 2019 10:27 am
kashmir-encounter-between-terrorists-and-indian-army

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி எல்லையோர கிராமங்கள் மற்றும் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை பத்கம் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்திய படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதையடுத்து தீவிரவாதிகள் 3 பேர் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சண்டையில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் குறித்து உடன‌டியாக தகவல் வெளியாகவில்லை.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close