கும்பமேளாவில் படகு ஆம்புலன்சுகள்

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Jan, 2019 12:58 pm
kumbamela-water-ambulance-introduced

கும்பமேளா திருவிழாவில் ஆபத்து காலங்களில் உதவுவதற்காக படகு ஆம்புலன்சு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், புனித நீராடலுடன் உலகப்புகழ்பெற்ற அர்த்த கும்பமேளா திருவிழா ஜனவரி 15ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த கோடிக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

ஜனவரி 15 தொடங்கி மார்ச் 4ஆம் தேதி வரை நடைபெறும் இந்த அர்த்த கும்பமேளாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 16 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக தற்காலிக தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் படகு ஆம்புலன்சு சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படகில், ஐசியு வசதி, அறுவைசிகிச்சை செய்யும் வசதி போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த படகு ஆம்புலன்சை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பராமரிக்கின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close