மத்திய பட்ஜெட்: பிப்.1 -இல் தாக்கல் செய்கிறார் அருண் ஜேட்லி!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 08:02 pm
fm-arun-jaitley-presents-budgets-in-parliament-inn-feb1

2019-20 -ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1 -ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். விரைவில் நாடு திரும்பவுள்ள அவர், நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1 -ஆம் தேதி வழக்கம்போல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ளதையடுத்து, இம்முறை பொது பட்ஜெட்டிற்கு பதிலாக, இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.

இதில், விவசாயிகளின் கடன் சுமையை குறைப்பது, அவர்களின் வருவாயை இரட்டிப்பாக்குவது தொடர்பான அறிவிப்புகள் முக்கியமாக இடம்பெறும் எனத் தெரிகிறது.

இத்துடன், தனிநபர் வருமான வரி வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 31 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 13 -ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close