மேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Jan, 2019 03:47 pm
tomorrow-amithsha-begins-election-campain-in-west-bengal

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாளை மக்களவை பிரசாரத்தை தொடங்குகிறார்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அமித்ஷா குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா பகுதியில், பாஜக சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அமித்ஷா நாளை பங்கேற்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், பாஜவுக்கு எதிரான கட்சிகள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் நடந்தது. இந்நிலையில், அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close