முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரிக்கிறது மத்திய அரசு

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 11:21 am
central-govt-to-hike-the-elderly-disabled-people-s-pension

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பெண்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்வரும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஏழைகளுக்கான சலுகைகளை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை அதிகரிக்கலாம் என அரசுக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் ஆகியோருக்கு தற்போது மாதந்தோறும் ரூ.200 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை ரூ.800ஆக அதிகரிக்கவும், 80 வயது மேற்பட்ட முதியோருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரு ரூ.500ஐ, ரூ.1,200ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உதவித்தொகையை அதிகரிக்கும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close