2019 தேர்தல் விளம்பரங்கள் ஒவ்வொன்றும் ஆய்வு செய்யப்படும் - கூகுள் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 08:40 pm
2019-election-political-ads-will-be-verified-google

2019 தேர்தலுக்கு இந்திய அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் நடைபெற்ற குழப்பங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தேர்தல் தொடர்பான விளம்பரங்களை முழுவதும் ஆய்வு செய்ய உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, சமூகவலைத்தளங்களில் பல போலியான செய்திகளும், விளம்பரங்களும் பரப்பப்பட்டு தேர்தல் முடிவுகளில் அது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில், அது 2019 தேர்தலில் இந்தியாவில் நடைபெற்ற விடக்கூடாது, என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வாக்காளர்களிடையே தவறான தகவல்கள் பரவாமலிருக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது உலகியிலே மிகப்பெரிய இணைய நிறுவனமான கூகுள். இதன்படி, தங்களது நிறுவனம் மூலம் அரசியல் விளம்பரங்கள் பதிவு செய்ய விரும்புவர்கள், தேர்தல் கமிஷனில் நிச்சயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற விதியை கூகுள் கொண்டு வந்துள்ளது. விளம்பரங்கள் கொடுப்பவர்கள் தேர்தல் கமிஷனிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு விளம்பரத்திற்கும் சான்றிதழ் பெற வேண்டும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

விளம்பரதாரர்களை கூகுள் நிறுவனம் பரிசீலித்த பின்னரே, அந்த விளம்பரத்தை தனது தளங்களில் பதிவு செய்யும் என தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் விளம்பரதாரர்கள் பரிசீலனை செய்யப்படுவார்கள் என கூகுள் தெரிவித்துள்ளது. 17ம் தேதி முதல், இந்த புதிய விதியை தனது அனைத்து தளங்களிலும் கூகுள் செயல்படுத்த உள்ளது. 

மேலும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு, வாக்காளர்கள் எந்த நேரமும், விளம்பரதாரர் பற்றியும், விளம்பரங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளும் விதமாக அது வைக்கப்படும், எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

"2019 தேர்தலில் ஒரு அரசியல் கட்சியோ அல்லது கட்சியின் வேட்பாளரோ அல்லது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரோ எந்த விளம்பரங்களை வெளியிட்டாலும், அது அனைத்துமே 'அரசியல் விளம்பர வெளிப்படைத்தன்மை அறிக்கை' என்ற பெயரில் பட்டியலிடப்படும்" என்று கூகுள் நிறுவனத்தின் இந்திய பொதுத்திட்ட இயக்குனர் சேதன் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close