குஜராத்தில் ஒட்டகப் பால் விற்பனை

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 10:02 am
gujarat-co-operative-society-started-camel-milk-sale

குஜராத் மாநிலத்தில் அரசு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் ஒட்டகப் பால் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 500 மில்லி (அரை லிட்டர்) ஒட்டகப் பால் கொண்ட பாட்டிலின் விலை ரூ.50 ஆகும்.

ஒட்டகப் பாலை குளிர்பதத்தில் வைத்திருந்தால் மூன்று நாட்களுக்கு கெடாது என்று கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குட்ச் மாவட்டத்தில் ஒட்டகங்களை வளர்ப்பவர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. காந்திநகர், அஹமதாபாத், குட்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே தற்போது ஒட்டகப் பால் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஒட்டகப் பாலில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் விற்பனையை கூட்டுறபு பால் உற்பத்தி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, மாட்டுப் பால் லிட்டருக்கு ரூ.28-30 வரையிலான விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், ஒட்டகப் பாலுக்கு ரூ.50 முதல் 55 வரையில் கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒட்டகப் பாலின் பயன்கள் குறித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து, ஒட்டகப் பால் விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close