வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்- ரயில் சேவை பாதிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 23 Jan, 2019 11:03 am
delhi-train-services-disturbed-due-to-heavy-snowfall

வடாமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 21 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

வடமாநிலங்களில்  கடும் பனி நிலவி வருகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், பனி அடர்த்தி காரணமாக சாலையில் சிறிது தொலைவு மட்டுமே கண்ணுக்கு புலப்படுவதால், சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி  வாகனங்கள்  செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பனியின் தாக்கம் காரணமாக ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. அதையடுத்து, இன்றும் டெல்லியில் 21 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

மேற்கு உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதேபோல் கிழக்குப்பகுதி மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close