அமேதியில் தேர்தல் பிரச்சாரம்: உ.பிக்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தி!

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 11:17 am
rahul-gandhi-to-begin-his-two-day-amethi-visit-today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்கள் பயணமாக தனது சொந்த தொகுதியான அமேதி தொகுதிக்கு இன்று செல்கிறார். 

2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விரைவில் வரவுள்ளது. வருகிற மே மாதத்திற்குள் மக்களைவை தேர்தலும் நடைபெறவுள்ளதையடுத்து ஆளும் கட்சி,  எதிர்க்கட்சிகள் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்தை தொடங்கி பல்வேறு இடங்களில் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று, தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக அவர் செல்கிறார். இன்று காலை 10.30 மணிக்கு லக்னோ வந்தடைந்த அவரை, உ.பி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். 

தொடர்ந்து அவர், அங்குள்ள கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அமேதி தொகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்

அதேபோன்று வருகிற ஜனவரி 25ம் தேதி  ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், 28ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி, பிப்ரவரி 3ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவிலும் நடக்க உள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றுகிறார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close