டெல்லியில் நேதாஜி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 11:43 am
pm-inaugurates-netaji-subhas-museum-at-red-fort

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று டெல்லியில் செங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 123வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, நேதாஜி குறித்து இன்று நினைவு கூர்ந்துள்ளார். 

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்நாளில் நான் நேதாஜி அவர்களுக்கு தலை வணங்குகிறேன். மன உறுதியோடு,  கண்ணியத்துடன் இந்நாட்டு சுதந்திரத்தில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அவருடைய கொள்கைகளை பூர்த்தி செய்யவும், ஒரு வலுவான இந்தியாவை உருவாக்கவும் நாங்கள் உழைப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

— Narendra Modi (@narendramodi) January 23, 2019

தொடர்ந்து, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைத்துள்ளார். இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அருங்காட்சியகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்திய ராணுவம் குறித்த ஓவியங்கள், புகைப்படங்கள் இடமபெற்றுள்ளன. 

அதன் தொடர்ச்சியாக, ஜாலியன் வாலாபாக் மற்றும் முதலாம் உலகப்போர் குறித்த அருங்காட்சியகம், 1857ம் ஆண்டு போர் குறித்த அருங்காட்சியகம் என மேலும் இரண்டு அருங்காட்சியகங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close