ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் ‛ஸ்லீப்பர் செல்’கள் கைது 

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 11:47 am
sleeper-cells-of-isis-arrested-in-maharashtra

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஸ்லீப்பர் செல்கள், மஹாராஷ்டிராவில் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்ப்ரா, தானே, அவுரங்காபாத் உள்ளிட்ட இடங்களில், பயங்கரவாத தடுப்பு படையினர், அதிரடி சோதனையில்ஈடுபட்டனர். 

அப்போது, சந்தேகத்திற்கு உள்ளான வகையில் இருந்த, 17 வயது சிறுவன்உ உட்பட, ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் அனைவரும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. 

ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடங்களில் இருந்து, வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள், வேதிப் பொருட்கள், ஆசிட், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close