இந்தியாவில் கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு - இ.பி.எப்.ஓ தகவல்!

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 03:00 pm
7-32-lakh-jobs-created-in-nov-employment-up-by-48-in-formal-sector-epfo-payroll-data

இந்தியாவில் கடந்த 15 மாதங்களில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு 48% உயர்ந்துள்ளதாக வருங்கால வைப்பு நிதி  நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் மூலம் தெரிய வந்துள்ளது. 

வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ) சமீபத்தில் ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டது. அதாவது கடந்த 2017 செப்டம்பர் மாதம் முதல் 2018 நவம்பர் மாதம் வரை இ.பி.எப்.ஓ-வின் சமூக பாதுகாப்பு திட்டத்தில் 73.5 லட்சம் பேர் இணைந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் மட்டும் 7.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 

இதன்மூலம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் 48% வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

முன்னதாக, செப்டம்பர் 2017 முதல் அக்டோபர் 2018 வரை 79.16 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான புள்ளி விபரத்தில் 66.18 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக குறைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 16.4% குறைவாகும். 

அதேபோன்று, கடந்த நவம்பர் 2018ல் 18-21 வயதுடையோர் 2.18 லட்சம் பேர், 22-25 வயதுடையோர் 2.03 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 

மேலும், பி.எப் பயனாளர்களின் ஆவணங்கள் தொடர்ந்து பதிவேற்றப்பட்டு வருவதால், இதில் மாற்றம் ஏற்படலாம் என இ.பி.எப்.ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close