ரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..!

  ஸ்ரீதர்   | Last Modified : 23 Jan, 2019 07:13 pm
2-5-lakhs-vaccancies-in-railway-piyush-goal

ரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகமான சொத்துகளுடன், ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய துறையாக ரயில்வே துறை இருந்து வருகிறது. இத்துறையில் சுமார் 14 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆண்டொன்றுக்கு சுமார் ஒண்றரை லட்சம் பேர் புதிதாக பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்நிலையில், ரயில்வே துறையில் கூடுதலாக 2.5 லட்சம்  புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக இனி ரயில்வே துறை இருக்கும் எனவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close