நிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்!

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 08:57 am
piyush-goyal-named-interim-finance-minister

ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு,  மத்திய நிதித்  துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவு காரணமாக, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, பிரதமரின் பரிந்துரையின்படி ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், நிதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

மேலும், அருண் ஜேட்லி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் பியூஸ் கோயல் வரும் பிப்ரவரி 1 -ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.

பியூஸ் கோயல் நிதித் துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகிப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close