வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை- தலைமைத் தேர்தல் ஆணையர்

  ஸ்ரீதர்   | Last Modified : 24 Jan, 2019 01:15 pm
no-alternative-for-evm-chief-election-commisioner

மின்னணு வாக்கு எந்திரங்களில் இருந்து வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்கு எந்திர முறை குறித்து பல எதிர்க்கட்சிகள் குறைகூறி வருவதோடு, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்துவரும் தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியாது என ஏற்கெனவே பலமுறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு முறையும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றார். 

இதுதொடர்பாக, அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்புகளின் ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் திறந்தமனதோடு பரிசீலிக்க தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அதேசமயம், அச்சுறுத்தல், வசைபாடுதல், நிர்ப்பந்தங்களுக்கு அஞ்சி மின்னணு வாக்குப் பதிவு எந்திர முறையைக் கைவிடப்போவதில்லை என்றும் சுனில் அரோரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close