அருண் ஜேட்லிக்கு மருத்துவர்கள் அட்வைஸ்!

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 03:13 pm
arun-jaitley-undergoes-surgery-in-us-advised-2-weeks-rest

மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லிக்கு வரும் செவ்வாய்க்கிழமை, அமெரிக்காவின் நியூயார்க்  நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் புற்றுநோய்க்கான முதல்கட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. 

இதைத்தொடர்ந்து குறைந்தபட்சம் 2 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 பாஜகவின்  மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய நிதியமைச்சராக இருந்தவருமான அருண் ஜேட்லி, எதிர்வரும் மக்களவைத் தேர்தலையொட்டி, பல்வேறு பொது விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களை தீவிரமாக கருத்துகளை பகிர்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஜனவரி 13 -ஆம் தேதி அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

அங்கு அவருக்கு வரும் செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் பிறகு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, மத்திய  நிதியமைச்சர் பொறுப்பு, ரயில்வே துறை அமைச்சர்  பியூஸ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவர்தான் ஜேட்லிக்கு பதிலாக, வரும் பிப்ரவரி 1 -ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு மே மாதம், அருண்  ஜேட்லிக்கு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் வகித்துவந்த மத்திய நிதியமைச்சர் பொறுப்பை பியூஸ் கோயல், கூடுதலாக சுமார் 100 நாள்கள் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close