குடியரசு தின ஒத்திகையில் முதல்முறையாக இடம்பெறும் துணை ராணுவப்படை பெண்கள்

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 05:41 pm
on-r-day-all-women-contingent-to-portray-nari-shakti

டெல்லியில் வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் அசாம் ரைபில்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த பெண்கள் முதல்முறையாக பங்கேற்கின்றனர்.

வருகிற ஜனவரி 26ம் தேதி நாட்டின் 70வது குடியரசு தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக டெல்லியில் குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பல்வேறு ராணுவப்படைகள் பங்கேற்கும். கடந்த 2015ம் ஆண்டு முதல் தான் இந்திய படையின் பெண்கள் முதல்முறையாக ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில், வருகிற 70வது குடியரசு தின விழா ஒத்திகையின் போது, துணை ராணுவ படையான, அசாம் ரைபில்ஸ் படையைச் சேர்ந்த பெண்கள் முதல்முறையாக பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து டெல்லி தலைமை ஜெனரல் மேஜர் ஜென் ராஜ்பால் புனியா, குடியரசு தின அணிவகுப்பில் துணை ராணுவப்படையின் பெண்கள் பிரிவு பங்கேற்பது இதுவே முதல்முறை. 2019ம் ஆண்டு குடியரசு தின ஒத்திகையில் அதிகளவு பெண்கள் இடம்பெறுவர். 'Nari Shakti' என்ற கொள்கையின் அடிப்படையில் இது பெண்களை ஊக்குவிப்பதாகவும் பெண்களின் சக்தியனை எடுத்துரைப்பதாகவும் இருக்கும்' என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close