பெண்களை பற்றி தவறாக பேசிய கேரள காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கோரினார்

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 10:22 pm
kerala-congress-leader-apologizes-after-controversial-statements-on-women

கேரளா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய தலைவர் சுதாகரன், முதலவரை விமர்சனம் செய்து பேசியபோது, பெண்களைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்குகளைன் கூறியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

கேரளா காங்கிரஸ் தலைவர் சுதாகரன், சமீபத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை பற்றி விமர்சனம் செய்து பேசினார். அப்போது, "முதல்வர் ஒரு ஆண் போல செயல்படுவார் என கூறினார்கள். ஆனால், அவர் ஒரு ஆண் போல செயல்படவில்லை. ஒரு பெண்ணை விட மோசமாக செயல்பட்டுள்ளார்" என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி ப்ரியங்கா காந்திக்கு கட்சியில் பெரிய பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், சுதாகரன் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தற்போது சுதாகரன் மன்னிப்பு கோரியுள்ளார். தனது கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டதாகவும், பெண்களை தான் எப்போதுமே மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close