தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கெடு நீட்டிக்கப்படாது - உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 03:37 am
no-exemption-of-deadline-for-assam-nrc

தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்க, அசாம் மாநில அரசுக்கும், என்.ஆர்.சி அதிகாரிகளுக்கும் ஜூலை 31 வரை விதிக்கப்பட்ட கெடுவை நீட்டிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களை கண்டுபிடிக்க, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) உருவாக்க நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. கடந்த 2013ம் ஆண்டு இந்த பதிவேட்டை உருவாக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர், அதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வரைவு பட்டியலும், ஜூலை 30ம் தேதி இரண்டாவது வரைவு பட்டியலும் உருவாக்கப்பட்டது. இரண்டாவது பட்டியலில், 3.29 கோடி விண்ணப்பங்களில், 2.9 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. விடுபட்ட 39 லட்சம் பேர் தங்களின் அடையாளங்களை சமர்ப்பித்து இறுதி பட்டியலில் இடம்பெற டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் அது 2019, ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது. 

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால், இறுதி பதிவேட்டை தயாரிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என என்.ஆர்.சி தரப்பில் கோரப்பட்டிருந்தது. ஆனால், காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அசாம் மாநில தலைமைச் செயலாளர், தேர்தல் கமிஷன் செயலாளர், மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் சந்தித்து பேசி, தேர்தலால் என்.ஆர்.சி பட்டியலுக்கு இடையூறு ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close