விரைவில் விற்பனைக்கு வருகிறது Redmi note 7!

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 11:53 am
redmi-note-7-will-be-launched-in-india-soon

ஸியோமி நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான Redmi note 7 இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன் விலை ரூ.10,500 ஆக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi note 4, 5, 6 என்று அடுத்தடுத்து மூன்று மாடல்களை இதற்கு முன்னதாக ஸியோமி நிறுவனம் வெளியிட்டது. அதன் pro version மொபைல்களும் விற்பனைக்கு வந்தன. அவை அனைத்தும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல லட்சம் மொபைல்கள் விற்றுத் தீர்த்தன. அந்த வரிசையில் Redmi note 7 வெளியிட ஸியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது ஏற்கனவே சீனாவில் வெளிவந்துள்ளது.

இது 6.30 இன்ச் தொடுதிரை கொண்டதாகும். முகப்பில் 13 மெகா பிக்சல் கேமிராவும், பின்பக்கத்தில் 48 மெகா பிக்ஸல், 5 மெகா பிக்ஸல் என இரண்டு கேமிராக்களும் உள்ளன. 3 ஜிபி ரோம் வசதியும், 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. Redmi note 7 இல் 4000 mAh அளவுக்கான பேட்டரி இருக்கிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close