ரயில்வேயில் வேலைவாய்ப்பு- ப.சிதம்பரம் அறிக்கை

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Jan, 2019 01:18 pm
railway-recruitment-bjp

ரயில்வேயில் அடுத்த 6 மாதத்தில் 1 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியது பாஜகவின் மற்றொரு மோசடி அறிவிப்பு என்று முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
 
மத்திய அமைச்சர் பியு‌ஷ் கோயல், ரயில்வேயில் அடுத்த 6 மாதத்தில் 1 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும், 2 ஆண்டுகளுக்குள் மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய  முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரயில்வேயில் கடந்த 5 ஆண்டுகளாக 2 லட்சத்து 82 ஆயிரத்து 976 பதவிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் தற்போது மத்திய அரசு விழித்துக்கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்து உள்ளது. 

இது பா.ஜ.க. அரசின் மற்றொரு மோசடி அறிவிப்பு ஆகும். பல்வேறு அரசு துறைகளில் ஏராளமான காலி பணியிடங்கள் இருக்கின்றன. அதே சமயம் நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை என்று அதில் சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close