கேரள வெள்ளம்- திறமையாக செயல்பட்ட விமானப்படை அதிகாரிக்கு பதக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Jan, 2019 05:00 pm
kerala-floods-airforce-commando-officer-awarded-vayu-sena-medal

கேரள வெள்ளத்தின் போது திறமையாக செயல்பட்டு வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றி விமானப்படை தலைவர் பிரசாந்த் நாயருக்கு வாயு சேனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஏராளமானேரர் உயிரிழந்தனர். கால்நடைகளும் வெள்ளத்தில்அடித்து செல்லப்பட்டது.

அப்போது திருவனந்தபுரத்தில் மீட்புக்குழு தலைவராக இருந்த விமானப்படை தலைவர் பிரசாந்த நாயர் திறமையாக செயல்பட்டு வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை ஹெலிகாப்டர் மூலம் மீட்டார்.

இதையடுத்து இந்திய விமானப்படை வீரர்களின் வீரதீரச் செயல்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் வாயு சேனா பதக்கம் பிரசர்ந்த நாயருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் இப்பதக்கம் அவருக்கு வழங்கப்பட உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close