காஷ்மீர்: வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர் காயம்!

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 07:31 pm
kashmir-soldier-injured-in-grenade-attack

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய கிரெனேட் வெடிகுண்டு தாக்குதலில், காஷ்மீர் போலீசார் ஒருவர் காயமடைந்தார். பேருந்து நிலையத்தின் அருகே உள்ள காவல்துறை சாவடியை நோக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில், தீவிரவாதிகள் இரண்டு கிரெனேட் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். அனந்த்நாக் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள காவல்துறை சாவடியை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் காயமடைந்தார். அவரை உடனடியாகப் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. 

இதேபோல, ஸ்ரீகுப்வாராவில் உள்ள காவல் நிலையத்தை நோக்கி மற்றொரு கிரெனேட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்தவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close