கும்பமேளாவில் குடியரசு தின விழா கொண்டாடிய சாதுக்கள்

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 02:25 pm
republic-day-celebrations-kumbhmela

நாடு முழுவதும் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் பங்கேற்றுள்ள சாதுக்களும், தேசிய கொ டி ஏற்றி, கையில் தேசிய கொடியை ஏந்திய படி, ஊர்வலமாக சென்று,  குடியரசு தின விழாவை கொண்டாடினர். 

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், கும்பமேளா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இங்கு திரிவேணி சங்கமத்தில் நீராட, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சாதுக்கள், பக்தர்கள், பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

நாடு முழுவதும், நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்ட நிலையில், கும்பமேளாவில் பங்கேற்றுள்ள சாதுக்கள், சன்னியாசிகளும், தேசிய கொடியேற்றி அதற்கு வணக்கம் செலுத்தினர். 

கைகளில் சிறிய அளவிலான தேசிய கொடிகளை ஏந்திய படி ஊர்வலம் சென்று, தங்கள் தேச பக்தியை வெளிப்படுத்தினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close